சட்டம், வாதங்கள், நீதிமன்றம் என்ற பின்னணியில் விதவிதமான வழக்குகளை எடுத்து கொண்டு, அதில் நீதிக்கான போராட்டத்தை விறுவிறுப்பாக காட்டும் இது போன்ற வித்தியாசமான கதைக் களங்களை எடுப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாடகத்தனமில்லாமல் யதார்த்தமாகவும், சுவாரஷ்யமாகவும் எடுத்துள்ளது வியப்பளிக்கிறது! இயக்குனர் ஷெபாலி பூஷன் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள பத்து எபிசோடுகள் கொண்ட வெப் தொடர் தான் ‘Guilty Mind’. ஒவ்வொரு எபிசோடிலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படுவது வெகு சுவாரஷ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தீபக் ராணா மற்றும் கஷாஃப் குவாஸ் கதாபாத்திரத்தில் ...