அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த இடைக்கால ஜாமீன் ஹேமந்த் சோரனுக்கு கிடைக்கவில்லை. தலை நகர் டெல்லி முதல்வருக்கு கிடைத்த நியாயம் ஜார்கண்டின் பழங்குடித் தலைவருக்கு மறுக்கப்படுகிறது! இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்; நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். உடனே அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் அவரை ஜார்க்கண்ட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகச் ...