உணவு வணிகமானது பசி தீர்க்கும் புனிதப்பணி! ஆனால், வணிகப் பேராசையில் இன்றைக்கு தரமற்ற உணவகங்கள் அதிகரித்துள்ளன. எதையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமோ, அவை இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளன! ஆகவே, அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சிலவற்றை கவனத்தில் கொள்வீர்களாக; தரமற்ற உணவை சாப்பிட்டதால் சில இடங்களில் வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சேர்ப்பு மற்றும் ஒரு சில உயிரிழப்புகளை அடுத்து, சமீப காலமாக உணவுத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களுக்கு ‘விசிட்’ அடித்து உணவுத் தரத்தை ஆய்வு செய்து அக்கறை காட்டி வருகிறார்கள்! உணவுத் துறை அதிகாரிகள் என்பவர்களில் ...