சுற்றுச் சூழலுக்காக போராடி வருகின்ற இன்றைய இந்திய இளம் தலைமுறையினருக்கு எல்லாம் இவரே முன்னோடி! ஆறு, மலை,காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கும் காந்தியத்தின் கடைசி எச்சமாக நம்மிடையே வாழ்ந்த இந்த காந்தியவாதி கடந்து வந்த பாதை கரடுமுரடானது! உறுதியானது! நாம் பின்பற்றுவதற்கான நிறைய செய்திகளைக் கொண்டிருப்பது…! வனங்களின் பாதுகாப்பிற்காக ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்காக உலகளவில் போற்றப்படும் இந்தியாவின் ஆகப்பெரிய சுற்றுச்சூழல் போராளி சுந்தர்லால் பகுகுணா அவர்கள் கொரோனா நுண் கிருமி பேருந்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலன் அளிக்காது இன்று இயற்கை எய்தினார் என்னும் ...













