இன்றைய நிலவரப்படி சசிகலா ஜனவரி 27 விடுதலையாவது உறுதி என நம்பப்படுகிறது. ஆட்சி, அதிமுக வசம் இருந்தாலும், அது கேப்டன் இல்லாத கப்பலாகவே அதிகார மிதப்பில் மிதந்து கொண்டுள்ளது! ஆட்சிக்கு தலைமை என்பதை யார் வேண்டுமானாலும் தாங்கலாம்! ஏனெனில், வழி நடத்தி செல்ல அரசு அதிகாரிகள் உள்ளிட்ட கட்டமைப்பு உள்ளது. ஆனால், கட்சித் தலைமை என்பது ஒரு கலையாகும்! அதற்கு அசாத்தியமான தலைமைப் பண்பு வேண்டும்! தலைவன் நினைப்பதை செயல்படுத்த அடிமட்டத் தொண்டன் அவர் கட்டளைக்கு காத்திருக்கும் மன நிலையை ஏற்படுத்த வேண்டும்! தலைவனின் ...