கங்கனாவை ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவியாக்கியே தீருவதென்று சிவசேனா தீர்மானித்துவிட்டது என்பதாகத் தான் சம்பவங்கள் போய்க் கொண்டுள்ளன! கங்கனா ரணாவத்துக்கும் சிவசேனாவிற்குமான மோதலில் சிவசேனை தன்னுடைய பக்குவமற்ற அணுகுமுறையின் மூலமாகப் படுமோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது! இந்தியாவிலேயே மிக மோசமான ஒரு பாசிஸ்ட் அரசியல் இயக்கம் என்றால்,யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவசேனா தான்! அந்த அளவுக்கு டெரரான ஒரு அரசியல் கட்சியான சிவசேனை சமீப காலமாகச் சரிவைக் கண்டு வருகிறது! இந்து மதத்தையும்,மகாராஷ்டிர பாரம்பரியப் பெருமைகளையும் உயர்த்தி பிடிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான இயக்கமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிவசேனைக்கு ஒரு மிகப் பெரிய மரியாதையும்,ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு காலத்திலிருந்தது என்பதை மறுக்கமுடியாது.ஆனால்,அந்த தகுதியை தன் நடவடிக்கைகளின் மூலம் காலப்போக்கில் அது ...