20,000 வீடுகளை இடிக்க போகிறார்களாம்!  மாற்று ஏற்பாடுகள் என்ன?  இது நகர்ப்புற மக்கள் வாழ்விட மேம்பாட்டு வாரியமா? உழைக்கும் மக்களை குற்றவாளிகளாக்கி, நரகங்களை உருவாக்கும் திட்டமா..? பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் சமூகத் தணிக்கை செய்ய வேண்டும்! நகர்ப்புற குடியிருப்பு- நிலவுரிமை கூட்டமைப்பினர் கோரிக்கை!! “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சென்னை மாநகருக்கு  பொருந்தும். சென்னையை  சிங்காரச் சென்னையாக மாற்றுகிறோம், எழில்மிகு சென்னையாக ஆக்குகிறோம் என்கிற பெயரில் கூவம் ஆறு, ...