நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு அதை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு பத்திரிகை துறைக்கு உள்ளது! ஆனால், சமீபகாலமாக அந்த தவறுகளில் தானும் சம்பந்தப்பட்டு ஆதாயம் அடைகிறது ஊடகத் துறை! அது தான் தற்போதைய நூலகத்திற்கான பத்திரிகைத் தேர்வில் வெளியாகியுள்ளது. ஒரு நாடு சிறந்ததாக உள்ளதா என்பதன் அடையாளங்களில் ஒன்று, அந்த நாட்டில் நூலகங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தில் நூலகங்கள் பெரும் வீழ்ச்சியை கண்டு வருவது தொடர்பாக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஆயினும், அது நாளுக்கு நாள் ...