நம்மிடையே வாழ்ந்த நவீன காந்தியாகத் தான் நான் அவரை உணர்ந்தேன்! சுய நலம் துறத்தல், வேறுபாடுகளின்றி அனைவரையும் அரவணைத்தல், இடையறாத மக்கள் சேவை, எளிமை, மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்த நேர்மை, போராடுவதில் காட்டிய நெஞ்சுரம், அன்பை பொழிவதில் வெளிப்படுத்திய தாய்மை குணம் என பன்முகத் தன்மை கொண்டவர் நம்மாழ்வார்! தான் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை தன் எண்ணங்களால், செயல்களால் உருவாக்கிச் சென்றவர் நம்மாழ்வார்! 1969 தொடங்கி அவர் களப் பணிகளுக்கு தன்னை ஒப்புவித்துக் கொண்டவர் என்றாலும், 1990 களில் சிறு விவசாயப் ...