கடல் பற்றிய அடிப்படை அறிவை நமக்கு கற்றுத் தருகிறது. கடல் சார்ந்த சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்தி, நமது அபிப்பிராயங்களை மறுகட்டமைப்பு செய்கிறது! கடல், கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்கள், அவர்களின் ஈடில்லா உழைப்பு ஆகியவை பற்றிய புரிதலைத் தருகிறது! மீனவர்கள் மீதான அரசுகளின் சுரண்டல்களை பேசுகிறது! கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான நூல்களை படைத்திருக்கிற முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்  எழுத்தின் எல்லா முனைகளிலும் தன்னைக் கூர்தீட்டி, அவ்வாறு கூர்தீட்டிய தனது எழுத்துக்களை நல்ல ஆயுதமாக சமூகத்துக்கு ஒப்படைத்திருக்கிறார்! ஒரு நூல் என்ன செய்துவிடும் என்பவர்களுக்கு ஒரு ...