பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட பாண்டிச்சேரியில் 18 ம் நூற்றாண்டில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இவர் பாண்டிச்சேரி கவர்னர்களிடம் பணியாற்றிய நேரத்தில் நாள்தோறும் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் காணப்படும் சுராஷ்யமான,அபூர்வ செய்திகள்,பல நாவல்கள்,திரைப்படங்களுக்கு மூலக்கருவாகக் கூடிய அளவுக்கு ஆர்வத்தை துண்டுகின்றன! மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தக் குறிப்புகளை வைத்து ‘வானம் வசப்படும்’ ‘ மானுடம் வெல்லும்’ என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 -1761) எழுதிய மூலக் குறிப்புகள் பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஆங்கிலேய அரசும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது. ...