பாசாங்குத் தனமற்ற பேச்சு, ஒளிவுமறைவற்ற உள்ளம், சக கவிஞர்களை நேசிக்கும் குணம், மனதில் பட்டதை பட்டென்று மறைக்காமல் சொல்லும் எதற்கு அஞ்சாத பேச்சாற்றல் …இது தான் உவமைக் கவிஞர் சுரதாவின் அடையாளம்! அவரது நூற்றாண்டை தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அய்யாவின் பலநூறு நேரடி மாணவர்களும், அவரை குருவாக ஏற்றுக் கொண்ட லட்ச மாணவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்…! நவம்பர் 23, 1921-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம், சிக்கல் என்ற ...