93 வயது வரை துடிப்புள்ள காந்திய செயற்பாட்டாளாராக வாழ்ந்து, காந்தியக் கொள்கைகளைத் தன் பாட்டாலும்,பேச்சாலும், கலை நயத்தாலும்,விளையாட்டுகளாலும் தேசம் எங்கும் பரப்பியவர் சுப்பாராவ்! சுமார் 400 சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் சரணடையக் காரணமானவர்! சுமார் 80 ஆண்டுகள் காந்தியப் பணியை கர்மமே கண்ணாகச் செய்து  மறைந்த இந்த மகத்தான காந்தியவாதியின் வாழ்க்கை நமக்கு பல ஆழமான செய்திகளைச் சொல்கிறது..! தமிழகத்தில் சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுப்பாராவ் பிறந்தது பெங்களுரில்! செயல்பட்டது தேசம் தழுவிய அளவில்! மத்திய பிரதேசத்தில் காந்தி ஆஸ்ரமம் வைத்திருந்தார். ராஜஸ்தானில்  உடல் ...