நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆசைகள் நிராசைகள்,விருப்புகள், வெறுப்புகள்,பொறாமைகள், இயலாமைகள்,பாலியல் தவிப்புகள் ஆகியவற்றை துல்லியமாக தன் படைப்புகளில் கொண்டு வந்து அசத்திய மாபெரும் படைப்பாளி தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நடக்கிறது! பேசப்படாத நுண்ணுர்வுகளை மையமாகக் கொண்ட நுட்பமான கதாபாத்திரங்களை தந்தவர் என்ற வகையில் அவர் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்! “இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தால் கடையில ஒரு தராசை வாங்கிட்டு வாங்க” என்று சொல்லுவது ஒரு பழைய பேப்பர்காரர். ...