அபாயகரமான இருண்ட குகைக்குள் மாட்டிக் கொண்ட 13 மாணவர்களை உயிருடன் மீட்கப் போராடும் மீட்பு வீரர்கள் சந்திக்கும் சவால்களை ரத்தமும், சதையுமாக காட்சிபடுத்தி உள்ளனர்!  நிஜ சம்பவத்தின் அடிப்படையில் டைரக்டர் ரான் ஹ்வார்டு நமக்கு ஒரு சிறந்த மனித நேய போராட்டத்தை காண்பித்து உள்ளார். ஆரம்பம் முதல் மொத்த படத்தின் நேரமான 147 நிமிடங்கள் வரை நம்மை எங்கேயும் அசையாது, நகராமல் பதைபதைப்புடன் இருக்க வைக்கும் படமாக உள்ளது. அமேசான் பிரைம் ஒடிடி யில் Thirteen lives என்ற படம் வெளியிடப்பட்டு உள்ளது. 2018ம் ...