சென்னைக்கருகில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன! அதை தடுத்து காப்பாற்றும் முயற்சிகளும் வேகம் கொண்டுள்ளன! கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் உள்ள மெத்தனங்கள்,தனிப்பட்ட சிலரின் பேராசைகள் இவற்றுக்கிடையே அதை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டதும்,அதையும் மீறி சில தவறுகள் நடப்பதையும் பாரபட்சமின்றி பேசுகிறது இந்தக் கட்டுரை! மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு இந்துக்கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தாராலும், பிரிவினராலும் பராமரிக்கப்பட்டு வந்தது. இச்சமயத்தில் கோவில் நகைகள் திருட்டுத்தனமாக வெளியில் விற்கப்பட்டன. அதேபோன்று நிலங்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து ...