மலையாள சினிமாக்களில் மீண்டும் ஒரு அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. ஒரு இனிய குடும்பத்தில் நிகழும் யதார்த்தமான சம்பவங்கள் மிக உயிர்ப்புடனும், இயல்பான நகைச்சுவையுடனும் சொல்லப்பட்டு உள்ளது. கண்ணையும் காதையும் கிழிக்கும் போலிப் பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் அசத்தலான படம்! தென்னிந்திய சினிமாக்களில் மலையாள மொழியில் வெளிவரும் படங்கள் எப்போதுமே தங்களது தனித்தன்மையை பாதுகாப்பதில் அதிக முனைப்பு கொண்டவை. சமீபகாலமாக அங்கு வெளிவரும் படங்கள் மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கி இருக்கின்றன என்றால் அது மிகையில்லை. பகத் பாசி, திலீஷ் போத்தன், மகேஷ் நாராயணன், ஜீத்து ...