கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, மாணவியின் சாவுக்கு காரணமான கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலை பள்ளிக்கு ஆதரவாக நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் ...