ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான எதிர்ப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து தனிமைப்பட்டு விட்டது திமுக! சமீபகாலமாக பாஜக எதிர்ப்பில் பம்முவது, மறைமுகமாக பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவது எனச் செயல்பட்டு வரும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி உறைவைப் பேண முடியுமா? என்பதே தற்போதைய பிரச்சினை! ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடர்பாக தமிழகத்தில் மிக எழுச்சியான சமூக நல்லிணக்கப் மனித சங்கிலியை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் நடத்தியுள்ளன! ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் தமிழகத்தில் மிக வலுவாக காலூன்ற வியூகம் அமைத்து செயலபடும் இந்த சூழலில் அதை எப்படி தடுத்து ...

பாண்டித்துரை, அரசரடி, மதுரை கனியாமுத்தூர் பள்ளி தொடர்பாக ஊடகங்களில் இரண்டு பிரேத அறிக்கைகளை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் பேசினால் நடவடிக்கை எடுக்கபடும் என்கிறாரே நீதிபதி சதீஸ்குமார்? ஜனநாயகத்தை காப்பதற்காகத் தான் நீதிமன்றம்! அழிப்பதற்காகவல்ல! மடியில் கனமிருப்பவர்கள் பதற்றப்படவே செய்வர்! நீதிபதி ஏன் பதறுகிறார். க.செபாஷ்டின், வேலூர். ‘செந்தில் பாலாஜியை இன்னும் வலுவாக தாக்கி பேசுங்கள்’ என திமுக அமைச்சர்கள் சிலரே தன்னிடம் ஏர்போர்டில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளாரே..? நான் விசாரித்த வகையில் இது உண்மை தான்! ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அதிகாரமட்டத்தில் நிலவும் குழப்பத்தின் அறிகுறி ...