அமோக வாக்கு பதிவு! பி.ஆர்.எஸ்கடைசி நேர தில்லுமுல்லுவில் ஈடுபட்டது! உண்மையில், மூன்று மாதத்திற்கு முன்பிருந்த நிலை முற்றிலும் வேறு! அது, கேசிஆரை வீழ்த்துவது முடியவே முடியாது என்ற தோற்றம்! ஆனால், இந்த மூன்று மாதத்தில் என்னவோ மாயாஜாலம் நடந்தது போல, காங்கிரசின் எழுச்சி சாத்தியமானது!  தேர்தலுக்கு முன்னும், பின்னுமான கருத்துக் கணிப்புகளும் காங்கிரசின் வெற்றியை உறுதிபடுத்துகின்றன! காங்கிரசின் வீரியமான பிரச்சார பலம், கள வேலைகள், அரசியல் ராஜ தந்திரங்கள், வியூகங்கள் போன்றவை மட்டுமல்ல, பி.ஆர்.எஸுமே தனக்குத் தானே தன் செயல்பாடுகள், பேச்சுக்கள் வழியே குழிதோண்டிக் ...

சூடு பறக்கிறது தேர்தல் களம்! பத்தாண்டு ஆட்சியை மீண்டும் தொடரத் துடிக்கிறார் கே.சி.ஆர். கெத்தாக களம் இறங்கி சுத்தாத இடமில்லை என சுற்றிச் சுழல்கிறது காங்கிரஸ்! சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே களத்தில்! பாஜக நிலையோ பரிதாபம்…! சகல பலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார் கே.சி.ஆர்..! 2018 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், BRS 119 இல் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் 28 சதவித வாக்குகளை பெற்று 19 இடங்களைப் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜக 118 தொகுதிகளிலும் ...