அதிகாரிகள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமாக ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை என்ற பெயரில் சாதாரண மக்களிடமும், எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியமாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்து செல்லவிட்டு மக்களை தான் பிடிக்கிறார்கள்..! தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 ...
பாஜக வளர்ந்து விட்டதாம்…! மிகைப்படுத்தப்பட்ட ஊடகப் பிரச்சாரங்கள் நடக்கின்றன!ஆனால், யதார்த்தம் என்ன..? இந்தத் தேர்தலை பொறுத்த அளவில் உண்மையில் பாஜகவின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல..! தன்னை வலுப்படுத்துவதே! இந்தத் தேர்தலில் ஜனநாயக சக்திகளின் கடமை என்ன..? ”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும் நடிகை கஸ்தூரி, “திமுக ...