அடி பணியாத மனோபாவம், அடிமைச் சிறுமதியாளர்களிடம் இருந்து விலகி நிற்கும் தனித்துவம், திராவிட கொள்கைகளில் உறுதிப்பாடு போன்ற இயல்புகளுடைய பி.டி.ஆர். தியாகராஜனுக்கும் திமுக தலைமைக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றாலும், அது இந்த அளவுக்கு மோசமாக போகுமா என்பது அதிர்ச்சியளிக்கிறது. பி.டி.ஆர் ஒரு செயல்வீரர், ‘சொல்லுக்கும், செயலுக்கும் அதிக இடைவெளி கூடாது’ என செயல்படுபவர். மேலை நாட்டுக் கல்வி கற்றவர் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் வகித்தவர். அந்த வகையில் சுதந்திரமான சிந்தனை கொண்டவர். அடிமை அரசியலை அறியாதவர், விரும்பாதவர்! ...
கோவிட் மனிதகுலத்திற்கு – முக்கியமாக பொருளாதாரத்திற்கு – ஏற்படுத்திய பாதிப்புகளை குறித்த சிறப்பான ஆய்வுகள் அவசியமானவை. ஆய்வுகள், தரவுகள் விஷயத்தில் தமிழகத்தின் நிலை என்ன? தமிழக அரசு நிர்வாக கட்டமைப்பு குறித்து பி.டி.ஆரும், ஜெயரஞ்சனும் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் நியாயமானவையே! உலக அளவில் ஏற்படும் சிறிய பிரச்சனை கூட பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யா-உக்ரைன் சண்டை, வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் போன்ற பல காரணங்கள் வளர்ந்த நாடுகளில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் உச்சபட்சமாக பாதிப்பு ஏற்படுத்திய காரணமாக ...