எனது ஊர் ஏகனாபுரம்.. 3 நில எடுப்புக்கு களம் இறங்கிவிட்டது தமிழக அரசு! கொந்தளிப்பில் இருக்கும் மக்களுக்கு எந்த தகவல்களும் வெளிப்படையாக சொல்லவில்லை! ஏன் தேவைக்கும் அதிகமாக நிலம் பிடுங்கப்படுகிறது..? எதிர்கட்சி நிலையில் எதிர்ப்பதும், ஆளுங்கட்சி ஆனவுடன் ஆதரிப்பதுமாக திமுகவிற்கு ஏன் இந்த இரட்டை வேடம்..? பரந்தூர் புதிய விமான நிலையத்தை எதிர்த்து போராடும் இருபது கிராமங்களில், ஏகனாபுரத்தில் மட்டும் இப்போராட்டம் கொதி நிலையை அடைந்து உக்கிரமான உஷ்ணத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. புதிய விமான நிலைய திட்டத்தால் முற்றிலும் அழிக்கப்படும் நிலையில் உள்ள ஏகனாபுரத்தில் ...
பரந்தூர் விமான நிலையத்திற்கு 13 கிராமங்களில் மொத்தமாக 4,747 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதில் அரசு நிலங்களை தவிர்த்து, சுமார் 3,247 ஏக்கர் நிலங்கள் மக்களின் விவசாயப் பயன்பாட்டில் இருப்பவை! கண்ணீர்விட்டுக் கதறும் மக்களை கால்தூசுக்கு சமமாக ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்! பெரும்பான்மை நிலங்கள் நெல் நன்கு விளையும் நன்செய் நிலங்களாகும்! இவை எளிய மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவையாகும்! இங்கு பெரும்பாலான மக்கள் ஏரி பாசனத்தில் விவசாயம் செய்பவர்களாகும்! இவை தவிர ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளையும் இந்த திட்டம் விழுங்கவுள்ளது. வளத்தூர், பரந்தூர், நெல்வாய், ...