இந்தியா முன்னெப்போதும் சந்தித்திராத ஜனநாயக விரோத,மதவாத மத்திய ஆட்சியாளர்களை கண்டு வருகிறது. இந்த அரசியலை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழக மக்கள் மட்டும் தான் முன்னணியில் உள்ளனர். அந்த தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதான எதிர்கட்சியான திமுக பிரதிபலிக்கிறதா? என்ற காத்திரமான கேள்விகளை இக் கட்டுரை முன்வைக்கிறது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக கிட்டத்தட்ட தனது ஓட்டு வங்கியை பறிகொடுத்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக உள்ளே வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டில் பல கட்சிகளும் திமுக ...