விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இது விவசாய இயக்கங்கள், சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் அணிதிரட்டி விட்டது! செய்யாறு மேல்மா விவசாயிகளுக்காக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன! இது நாள் வரை பாஜகவை மட்டுமே பகையாக பார்த்த மக்கள், தற்போது திமுகவையும் பார்க்கின்றனர்! முப்போகம் விளையும் பசுமை பூமியை விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி ஏழை, எளிய குடிகள் 124 நாட்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பெரிதாக எந்த ...

திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களில் விவசாய நிலப் பறிப்புகள் நடந்துள்ளன! நாளும், பொழுதுமாக விவசாய நிலங்களை பறித்த வண்ணமுள்ள தமிழக அரசின் உண்மையான நோக்கம் என்ன..? விவசாயிகள் மீதான குண்டர் சட்ட வாபஸிலும் ஒரு நாடகமா? “விவசாயிகள் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டோம்” என்கிறார் முதல்வர்! ஆனால், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விவசாயிகள் ஜாமின் மனுவையே நிராகரிக்க சொல்லி அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோர்ட்டில், “குண்டர் சட்டம் விவசாயிகள் மீது ரத்து என ...