‘இந்திய நாட்டில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கானதல்ல’ என்பதை இந்த பிரச்சினையை இவர்கள் அணுகிய விதம் வெளிப்படுத்திவிட்டது! மக்களின் விரக்தி  மற்றும் ஏமாற்றங்களை பார்லிமெண்டில் எதிரொளிக்க இந்த இளைஞர்கள் செய்த அதிரடி வழிமுறை எல்லா வகையிலும் பயனற்றுவிட்டது; மக்களைவையில் மக்களின் அதிருப்திக் குரலை, விரக்தியை  நடக்கின்ற ஆட்சியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு அதிரடிச் செயலை செய்துள்ள இந்த இளைஞர்களின் செயல் நமக்கு ஏற்புடையதாக இல்லை எனினும், தங்கள் உயிரையும், எதிர்காலத்தையும் பணயம் வைத்து மக்கள் குரலை ஒலித்துள்ளனர் என்பதே நிதர்சனம்! ஆனால், ...