சுபமங்கள காரியம் தொடங்கி சுகமான தாம்பத்தியம் வரை தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது, வெற்றிலை! இதன் சமூக வரலாறு சுவாரசியமானது. குரல் வளத்தைக் கொடுக்கும். ஜீரணத்திற்கு உதவும் என்பது மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தில் வியக்கதக்க வகையில் பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுகிறது; நம் முன்னோர்கள் ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படையாக வெற்றிலையை உட்கொண்டனர். சாப்பிட்ட பிறகு வெற்றிலை தரிப்பது சம்பிரதாயமாக மட்டுமல்ல, நோயற்ற வாழ்வுக்கான உத்திரவாதமாக பார்க்கப்பட்டது. வாய்துர் நாற்றத்தை தவிர்க்கும். பற்களை பாதுகாக்கும், நெஞ்சில் சளி சேராமல் காக்கும்.. போன்ற பல நோக்கங்கள் இதில் ...
ஒன்றா, இரண்டா எத்தனையோ மருத்துவ பலன்கள் வெற்றிலையில் உள்ளன! இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பித்தம்,கபம் தொடங்கி ஆண்மை வீரியம் வரை எக்கச்சக்க நோய்களுக்கு தீர்வு தரும்! மங்கள நிகழ்ச்சிகளில் இதுவே மணி மகுடம்! மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளுள் ஒன்று வெற்றிலை. மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்த வெற்றிலையைச் சாப்பிடச் சொன்னாலே பலர் முகம் சுளிக்கிறார்கள். புகையிலை சேர்த்துப் போட்டு வெற்றிலையின் மீதான பெயரை கெடுத்து விட்டது இந்தச் சமூகம். அதனாலேயே நம்மில் பலர் வெற்றிலையா? என்று தலைதெறிக்க ...