தமிழ்நாட்டில் இருக்கிற சினிமா நடிகர். நடிகைகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர்களை வலைவீசி பிடித்து பாஜகவில் இணைப்பதே ஒரு பெரிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என தெரிய வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பாஜகவில் இணைந்த நடிகர்,நடிகைகள் பட்டாளத்தை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது! ஏன் சினிமாகாரர்களுக்கு மட்டும் பாஜக மீது ஒரு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது! இவர்கள் யாருமே பணம் தராமல் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்! சினிமாவில் சம்பாதிப்பதை அரசியலில் பிரச்சாரம் செய்தோ அல்லது ஏதாவது பதவி, செல்வாக்கு பெற்றோ அடையலாம் என்று தான் வருகிறார்கள்! ...