ஏற்கனவே மிகக் குறைந்த அதிகாரங்களோடு இயங்கியதே டெல்லி அரசு! அந்த குறைந்தபட்ச அதிகாரத்தையும் இல்லாமலாக்க ஒரு மசோதா! தொடர்ந்து, மத்திய அரசுக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டும், மாநில அரசு அதிகாரங்களை குறைத்தும் வருகிற பாஜக அரசின் மூர்க்கத்தனத்திற்கு இது சிறந்த உதாரணம். உண்மையில் இது ஆம் ஆத்மி மீது மட்டும் தொடுக்கப்பட்ட தாக்குதலல்ல! ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நடக்கும் தொடர் தாக்குதல்! இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்…? பாஜகவின் அனைத்து தந்திரோபாயங்களையும் மீறி கவிழ்க்கவோ, மிரட்டவோ வாய்ப்பில்லாமல் ஒரு நேர்மையான ...