பகுத்தறிவு என்பது வெற்று ஜம்பமா? அது சின்னஞ் சிறுசுகளின் பிள்ளை விளையாட்டா? பொறுப்பாக விவாதிக்க வேண்டிய ஒன்றல்லவா? பா.ரஞ்சித் கல்லா கட்டுவதற்கு பகுத்தறிவையே பலிகடா ஆக்குவாரா..? அம்பேத்காரால் வணங்கப்பட்டவர் புத்தர். அம்பேத்காரை விட பா.ரஞ்சித் அறிவாளியா? ஒரு காரசார அலசல்! விக்டிம் என்ற ஒரு நான்கு கதைகள் கொண்ட அந்தாலஜி படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். அதில் இரண்டாவது கதையாக இடம் பெற்றுள்ள தம்மம் என்ற குறும்படத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் உட்கார்ந்து இருக்கும் ஒரு புத்தர் சிலை மீது பத்து அல்லது பனிரெண்டு ...