துப்புறவுப் பணியாளர்களை கண்ணியத்திற்குரியவர்களாக நடத்த வேண்டும் என களத்தில் இறங்கிப் பணியாற்றியவர் மகாத்மா காந்தி! ’’மீண்டும் ஒரு பிறவி எனக்கிருந்தால் துப்புறவாளனாக பிறக்க விரும்புகிறேன்’’ என்று கூறிய காந்தியின் நினைவு நாளில் இன்னும் இந்தியாவில் துப்புறவு பணியை நவீனப்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல, இந்தியாவில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்களும், அழுத்தப்படுபவர்களுமாக துப்புரவு தொழிலாளர்களே உள்ளனர் என்ற வகையில், அவர்கள் குறித்த உண்மை நிலவரத்தை விளக்கும் அ. சகாய பிலோமின்ராஜின் நேர்காணலே இது! ”துப்புரவு பணியை கண்ணியமான தொழிலாக மாற்ற வேண்டும்’’ என்பதற்காக எழுதியும்,பேசியும் சமூகப் பணியாற்றும் ...