யாரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை! கிராமங்களில் விவசாயிகள் மத்தியில் இது எந்தச் சலனத்தையும் மேற்படுத்தவில்லை! மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி என்ற அதிமுக அரசு எய்திய அஸ்த்திரத்தால் பலடைவது விவசாயிகளல்ல என்பது தான் இதிலுள்ள யதார்த்தம்! தரப்படுவதாகச் சொல்லப்படும் விவசாயக்கடன்களோ, அதன் தள்ளபடிகளோ விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பது மட்டுமல்ல, உண்மையில் கடன்களும், தள்ளுபடிகளுமே விவசாயிகளின் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றன! முதல்வர் பழனிச்சாமி குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பல வருடங்களாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்குவது மாபெரும் அநீதியாகும்! 12,110 ...