திட்டங்களை செயல்படுத்தும் போது கொள்ளை அடிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டியவர் பழனிச்சாமி. எந்த ஒரு திட்டத்திலும் எளிய மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற ஒரு நன்மையாவது இருக்கும். ஆனால்,அதையும் கூட இல்லாமலாக்கியவர் பழனிச்சாமி! கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம்! ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார்? இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா? முடித்திருக்கக்கூட ...

யாரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை! கிராமங்களில் விவசாயிகள் மத்தியில் இது எந்தச் சலனத்தையும் மேற்படுத்தவில்லை! மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பயிர்க் கடன் தள்ளுபடி என்ற அதிமுக அரசு எய்திய அஸ்த்திரத்தால் பலடைவது விவசாயிகளல்ல என்பது தான் இதிலுள்ள யதார்த்தம்! தரப்படுவதாகச் சொல்லப்படும் விவசாயக்கடன்களோ, அதன் தள்ளபடிகளோ விவசாயப் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பது மட்டுமல்ல, உண்மையில் கடன்களும், தள்ளுபடிகளுமே விவசாயிகளின் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றன! முதல்வர் பழனிச்சாமி குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பல வருடங்களாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்குவது மாபெரும் அநீதியாகும்! 12,110 ...

டாஸ்மாக் மதுக்கடைகளால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி பறிபோனவண்ணம் உள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே அதிக விதவைகள் கொண்ட பிரதேசமாகிவிட்டது..! பல லட்சம் தமிழக இளைஞர்கள் உடல் நலமும், உள்ள நலமும் கெட்டு வேலை செய்யத் திரானியற்று குடும்பத்திற்கு பாரமாக வாழ்ந்து வருகின்றனர்.  நாட்டுக்கு பயன்பட்டிருக்க வேண்டிய இளைய தலைமுறையின் உழைப்பாற்றல் தெருப்புழுதியில் புரள்கிறது! இதனால் தான் வட மாநில தொழிலாளர்களின் உழைப்பை தமிழகம் சார்ந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டது! தமிழகத்தின் உற்பத்தி திறனும், உழைக்கும் திறனும் ஆறாய் பெருக்கெடுத்தோடும் மதுக் கலாச்சாரத்தால் சூறையாடப்பட்டு வருகிறது! ...

எது பக்தி? எது பகட்டு? என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். பக்தி என்பது பரிசுத்தமானது. அது ஒவ்வொரு பக்தனின் ஆழ்மனத்தோடு தொடர்புடையது! ஆனால், முருக கடவுளின் பெயரால் பாஜக செய்வது பக்தியல்ல,பகட்டு அரசியல்! அது ஆண்டவன் பெயரிலான ஆதாய அரசியல்! இந்த ஆதாய அரசியலுக்கு இங்கு கள்ளதனமாக களம் அமைத்துக் கொடுக்கிறது அதிமுக அரசு! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது திமுக! இந்த வேல் யாத்திரையின் பின்னணியில் புதைந்து கிடக்கும் அரசியலை தோல் உரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை! ’’பாஜகவின் வேல் யாத்திரைக்கு ...