தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்,தன் அதிகாரத்தை செல்லுபடியாக்கிக் கொள்ளவும் தான் வழிகாட்டுக் குழுவைக் கேட்டார் ஒ.பி.எஸ். அது தற்போது அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளது. எடப்பாடிக்கும் இது தான் நிலைமை! ஐந்து பேரை தேர்ந்தெடுத்ததன் மூலம் அனைத்து ஆதரவாளர்களையும் தன்னளவில் எதிரியாக்கிக் கொண்டார் பன்னீர். அவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது அவரை கைகழுவும் நிலைக்கு தங்களை தள்ளியதாக உணருபவர்களான அவரை நம்பி வந்த 11 பேரில் ஒருவருக்கு கூட அந்தக் குழுவில் இடமில்லை. அவருக்கு அணுக்கமாக இருந்து பல்வேறு தருணங்களில் அவரை பாதுகாத்த கே.பி.முனுசாமிக்கு இடமில்லை.டெல்லியில் ...