கடலை தனது தெய்வமாக நினைக்கிறார்கள் மீனவர்கள். ஏனெனில்,அது தான் அவர்களின் வாழ்வாதாரம்! ஆனால் இப்போது மீன்பிடிக்க மீனவர்களுக்கு ஏககெடுபிடிகள் கொடுக்கிறது அரசு! உரிமம் வாங்க வேண்டும். இந்த குறைந்த தூரம் வரை தான் மீன் பிடிக்க வேண்டும்,ஆழ்கடலுக்கு செல்லக் கூடாது…என்றெல்லாம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் போட்டுவிட்டு, பன்னாட்டு நிறுவனக் கப்பல்களுக்கு- குறிப்பாக கார்ப்பரேட் கடல் வணிகம் செய்பவர்களுக்கு மட்டுமே – ஆழ்கடல்களுக்குச் சென்று மீன் பிடிக்கும் உரிமை என்ற வகையில் சட்டங்களை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே, பல நூற்றாண்டுகளாக, காலம்,காலமாக மீனவர்கள் ...