வடகிழக்குப் பருவமழை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கடந்த மாதத்தில் மழைப்பொழிவை கொடுத்தது. ஏறக்குறைய மாநிலத்தில் ஓடும் எல்லா ஆறுகளும் ஏராளமான உபரி நீரை வங்கக் கடலில் கொண்டுபோய் சேர்த்தன. ஆட்சியாளர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு மேற்கொண்ட  மழைநீர் வடிகால் திட்டங்களை இம்மழை அம்பலத்திற்கு கொண்டு வந்தது .அதே சமயத்தில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செய்த உருப்படியான திட்டங்களை இந்த கனமழை காட்டிக்கொடுத்தது. மயிலாப்பூரின் மக்கள் பிரதிநிதியாக இருந்த ஓர் அரசியல் வாதி  சாலைகளில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளத்தை இங்குள்ள நான்கு ...