இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார். வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள்  முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை ...