சூரரை போற்று படத்தின் கதை, அது உயிரோட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் விதம், சூர்யா  ஊர்வசி உள்ளிட்ட அனைவரின் அபார நடிப்புத் திறன், அற்புதமான இயக்கம்,துடிப்பான இசை, காட்சிபடுத்தலில் உள்ள நுட்பங்கள் ஆகியவை அனைத்து ரசிகர்களையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தப் படம் பேசியும்,பேசாமலும் உணர்த்தும் அரசியல் அபாரமானது. இதுவரை தமிழ் சினிமா பேசத் தயங்கியதும் கூட! ஆகவே, இந்தப் படம்  ஒரு தரப்பை ரொம்பவே கலவரப்படுத்தியுள்ளது! ஆனால்,அமேசான் மூலம் பல கோடி பார்வையாளர்களை சென்றடைந்துவிட்டது! இது வரை எந்த தமிழ்படத்திற்கும் அமேசானில் கிடைக்காத பார்வையாளர்கள் இந்தப் படத்திற்கு ...