இந்த ஆவணப் படம், தில்லி முகாம்களின் பாகிஸ்தான் இந்து அகதிகள், ரோகிங்கா முஸ்லிம் அகதிகள் பற்றியது. இந்து அகதிகள் பசியால் துடிக்கின்றனர். சாலை ஓரங்களில் ரோகிங்கா பெண்கள் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் அகதிகள் சந்திக்கும் அவலங்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன! சென்னையின் பல்வேறு அரங்குகளிலும், கல்லூரிகளிலும் 80 ஆவணப்படங்களும், குறும் படங்களும், பிப்பிரவரி 21 முதல் 27 வரை நடைபெற்ற 10 வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழாவில் திரையிடப்பட்டன. அப்படி திரையிடப்பட்ட படம்தான் ‘Footloose: A story of belonging’ (தளர்ந்த ...