தமிழகம் ஊழலில் உச்சபட்ச சாதனைகளைப் படைத்துக் கொண்டுள்ளது என்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகளே அத்தாட்சியாகும்! ஏற்கனவே இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து உள்ளன. தலைமைப் பொறியாளர் நியமனம் தொடங்கி,அடிமட்டத் துப்புறவுப் பணியாளர் நியமனம் வரை எல்லாவற்றிலும்,கையூட்டு,லஞ்சம் என ஊழலில் ஊறித் திளைக்கும் வேலுமணிக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் இவர் தலையில் நன்றாகக் கொட்டு வைத்துள்ளது! உள்ளாட்சி அமைப்புகளை உதாசீனப்படுத்தி,உள்ளாட்சிகளின் தேவைகளை அறியாமலும், உரிமைகளை மதிக்காமலும்,பணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளாட்சித் துறை டெண்டர் விட்ட 2,369 கோடி அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பஞ்சாயத்து ராஜ் ...