இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்த மண் தான் வங்கம்! முற்போக்கு சீர்திருத்ததிற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மீகத்திற்கு விவேகானந்தர், அரசியலுக்கு சுபாஷ் சந்திரபோஸ், கவிதை இலக்கியத்திற்கு தாகூர், நவீன கதை இலக்கியத்திற்கு சரத்சந்திரர், சேவைக்கு அன்னை தெரசா….என்று இந்தியாவின் ஆகச் சிறந்த ஆளுமைகளை தந்த அந்த கலாச்சார தலை நகரம் இன்று நாளும், பொழுதும் கலவரபூமியாக மாறிக் கொண்டுள்ளது கவலையளிக்கிறது! முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை இழந்தது ஒன்றும் அதிசயமல்ல! அரசியலில் தோல்விகள் வரும்,போகும்! ஆனால்,கட்சியே காணாமல் ...