அரசியல் அமைப்புச் சட்ட நாளான இன்று நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப்,ஹரியாணா விவசாயிகள் பெரும் ஊர்வலமாக டெல்லியை நோக்கி சென்ற வகையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த தண்ணீர் பீய்ச்சி அடித்து,பலப்பிரயோகம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் புயல், வெள்ள பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. சென்னை,கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என  தொழிற்சங்கங்கள்  கேட்டுக் கொண்டு உள்ளன.பொதுவாக நாடு முழுவதும்  வேலைநிறுத்தம், மறியல், கைது நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ...