எதைத் தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தையில்லாமல் தற்போது தடுப்பூசியை வைத்து மத்திய மாநில ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறார்கள்! தடுப்பூசிகள் குறித்தும் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீதும் பொய்யான பிம்பங்களை கட்டமைத்து அமைச்சர்களும், முக்கிய அரசுப் பதவிகளில் இருப்போரும், மூட நம்பிக்கைகளைப் பரப்பி வருவது கவலையளிக்கிறது! அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அவர்களின் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசிகளை அவசரக் கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்ற ஐயம் ...