ஐ.ஏ.எஸ் அதிகாரியாக  1956 முதல் 1990 வரை  இருந்த  பி.எஸ்.கிருஷ்ணன், மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்க காரணமானவர்.மேலும் இவர், புத்த, சீக்கிய மதத்தின் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு, வன்கொடுமை சட்டத்தின் வடிவாக்கம்,  மனிதக் கழிவை மனிதன் அகற்ற  தடை  சட்டங்கள் ,  இசுலாமியருக்கு இட ஒதுக்கீடு என பல  முன்னெடுப்புகளுக்கு காரணமானவர். ஆதிக்க சாதிகள் கோலோச்சிய அதிகாரவர்க்கத்தினூடே எளிய மனிதர்களுக்காக களமாடிய இவரது வரலாறு சாகஸமானது..! ” The Crusade of Social Justice “ என்று ஆங்கிலத்தில் வெளியான பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை ...