பொதுவுடமைப் போராளி என்ற மிடுக்கோடும், எழுத்தாளன் என்ற ஞானச் செருக்கோடும், முன்கோபம்,முரட்டுத் தனம் ஆகிய இயல்புகளோடும், அதிரவைக்கும் நகைச்சுவை உரையாடல்களுடனும் நம்மோடு வாழ்ந்த இளவேனில், மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கமுடியாதவனாகவும், இனி அவரை பார்க்க இயலாதே என்ற ஏக்கம் கொண்டவனாகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்! அவருடைய எழுத்து மட்டுமல்ல, பேச்சும் வசீகரமானது தான்! சாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமனிதனாக இறுதி வரை வாழ்ந்தவர் இளவேனில்! ஒரு முறை இவரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடையாளப்படுத்த சிலர் முனைந்தபோது  சொன்னார், ” எனது தாத்தா பிள்ளைமாரு, பாட்டி ...