ஆளுனர் ஆர்.என்.ரவி டிஜிபி சைலேந்திரபாபுவை அழைத்துப் பேசினார் செப்டம்பர் 22 ந்தேதி! அதற்கடுத்த நாளிலிருந்து அதாவது 23-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் செப்.23 அன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது! நான்கைந்து நாட்களில் நடந்த இந்த வேட்டையில் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ...