பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு துறைகளில் கடை நிலை ஊழியர் பணியிடங்களுக்கு கூட வட மாநிலத்தவர்களே சுமார் 90 சதவிகித இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர்! அதுவும், அஞ்சல்துறையில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மிக அதிகம்! இது இப்போதும் தடையின்றி தொடர்வது எப்படி? தற்போது கூட அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணியில் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதற்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தந்த மண் சார்ந்த மக்களுக்குத் ...
தமிழக ரயில்வே வேலைகளில் பிற மாநிலத்தவர் அதிகமான இடங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள் என தமிழக கட்சிகள் அவ்வப்போது சூடாக அறிக்கைகள் விட்டு போராட்டம் நடத்தி வருகின்றன! தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பணி இடங்கள் 95% வெளி மாநிலத்தரால் ஆக்கிரமிக்கப்படுவதால், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.. .! இதற்கு பின்னணியில் பாஜக அரசின் சதி இருக்கிறதா..? இன்று, நேற்றல்ல, கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே தென்னக ரயில்வே பணியிடங்களை நாம் அப்படியே லம்பாக வட இந்தியர்களிடம் பறி கொடுத்து வருவதான குற்றச்சாட்டுகளும், போராட்டங்களும் இடைவிடாது ...