உலகில் முப்பது ஆண்டுகளாக முடியாத ஒன்றை, முடித்துக் காட்டிவிடுவதாக நம்ப வைத்து மக்களை முட்டாளாக வைத்திருந்த ஒரு நபரும்,அப்படி ஏமாந்த ஒரு தேசமும் தமிழகமாகத் தான் இருக்க முடியும்! இந்த விவகாரத்தில் மக்களை மட்டுமல்ல தன்னைத் தானே ரஜினி ஏமாற்றிக் கொண்டார் என்றும் நான் சொல்வேன்! தான் ஓடமுடியாத மண்குதிரை என்று அவருக்கே நன்றாக தெரியும்! ஆனால்,என் முதுகில் தமிழகத்தையே சுமந்து கரைசேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையை  மறை முகமாகத் திரைப்படங்களிலும், நேரடியாக ஊடகங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டமைத்து அதைக் கலைந்து விடாமல் காப்பாற்றியும் வந்தார். ஒரு வகையில் ...