மாமனிதன் என்பதன் இலக்கணம் என்ன? என்பதற்கு இந்த சினிமாவை விட சிறப்பாக விடை சொல்ல முடியாது! வெள்ளந்தியான ஒரு மனிதன் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளும் போது ஏற்படும் அளவில்லா துயரத்திலும் கூட, தன்னிலையோ, தன்மானமோ இழக்காமல், வாழ்ந்து மாமனிதனாகிறான் என்பதை திரைக் காட்சிகளின் ஊடே கவிதையாக்கியுள்ளனர்! உழைப்பின் வழியே கிடைக்கும் பணம் மட்டுமே உத்தமம் என்று எண்ணும் மனம்! அடுத்தவர் பொருளுக்கு கிஞ்சித்தும் ஆசைப்படாத குணம்! மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டும் இயல்பு..இப்படியான ஒரு ஆட்டோ தொழிலாளி ராதாகிருஷ்ணனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி! தன் ...