ரொம்ப பேரு இப்படித் தான் நினைக்கிறாங்க..! அதாவது 30 முதல் 40% பேர். இது ஜெயிக்கிற கட்சி வாங்குகிற ஓட்டுகளை விட அதிகமாக இருக்குது. ஒரே மாதியாக பலரும் நினைக்கும் போது எப்படியான விபரீதம் நடக்கும் என்பதற்கு ஒரு சுவாரசியமான தெனாலி ராமன் கதை இருக்குது! இது ஒரு தெனாலிராமன் குட்டிக் கதை. கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் மழை மும்மாரிப் பொழிந்தது.  பூமி விளைந்தது. செல்வம் கொழித்தது. அனைவரும் நிறைவான, மகிழ்வான  வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மன்னரும் நம்பினார்! அரசன் மகிழ்வோடு இருந்த போது ...